ADDED : நவ 18, 2026 04:10 PM

புதுடில்லி: டில்லியில் World Federation of Exchanges கூட்டமைப்பின் 65வது பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கையை தேசிய பங்குச்சந்தை(என்எஸ்இ) மேலாண் இயக்குனர் ஆஷிஷ்குமார் விசாரித்தார்.
பிரதமர் மோடி கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக தற்போது சந்தைகளின் செயல்பாட்டை மாற்றுகின்றன. அவை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், சைபர் பாதுகாப்பு , சந்தை பாதுகாப்பு மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. உலகளாவிய சந்தைகளுக்கு இடையேயான நெருங்கிய தொடர்பு , நிதி நிலையற்ற தன்மை மற்றும் உருவாகி வரும் அபாயங்களை எதிர்கொள்ள அதிக தயார் நிலையை அவசியமாக்குகின்றன. பரந்த சர்வதேச ஒத்துழைப்பு தேவை. உள்கட்டமைப்பு, புத்தாக்கம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக நீண்ட கால மூலதனத்தை திரட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
