நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது
நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது
UPDATED : மே 31, 2024 07:08 PM
ADDED : மே 31, 2024 07:04 PM

கண்ணூர்: ஓமன் நாட்டிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை விமான பணிப்பெண் தன் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கேரளாவின் கண்ணுருக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த 28-ம் தேதி கொச்சி பிரிவு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையம் வந்திறங்கிய பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை .
இந்நிலையில் விமானப்பணிப்பெண் ஒருவர் மேல் சந்தேகம் ஏற்படவே அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் மலக்குடலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 980 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்திய விமான பணிப்பெண் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த சுரபி காதுண் என்பதும் இதற்கு முன் இது போன்று பல முறை தங்கம் கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
அவரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.