என்னதான் செய்தார் ஏர் இந்தியா ஊழியர்; கொந்தளித்த பெண் பயணி கும்மாங்குத்து!
என்னதான் செய்தார் ஏர் இந்தியா ஊழியர்; கொந்தளித்த பெண் பயணி கும்மாங்குத்து!
ADDED : செப் 04, 2024 07:00 AM

புதுடில்லி: மும்பை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரச்னை வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.ஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்தது.
தாக்குதல்
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கவுன்ட்டரில் பெண் ஊழியர் ஒருவரிடம் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த பெண் பயணி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். ஊழியர் பலத்த காயமுற்றார். ஏர் இந்தியா விளக்கம்
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'செப்டம்பர் 1ம் தேதி, மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர், எங்கள் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். டியூட்டி மேனேஜர் உடனடியாக CISF-க்கு தகவல் கொடுத்தார். அந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.