ADDED : ஜூன் 23, 2025 03:11 AM
புதுடில்லி: 'ஏர் இந்தியா' விமான நிறுவனம், சர்வதேச அளவில் இயக்கி வரும் 19 வழித்தட விமானங்களை தற்காலிகமாக குறைக்க உள்ளதாகவும்; மூன்று வழித்தடத்தில் விமான சேவைகளை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், சர்வதேச அளவில் இயக்கி வரும் பெரிய விமானங்களை 15 சதவீதம் குறைப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது 19 சர்வதேச வழித்தடங்களில் இயக்கி வரும் 118 வாராந்திர சிறிய விமானங்களை 5 சதவீதம் அளவுக்கு தற்காலிகமாக குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், பெங்களூரு - சிங்கப்பூர், புனே - சிங்கப்பூர் மற்றும் மும்பை - மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா ஆகிய மூன்று வழித்தட சேவைகளை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு சேவையான டில்லி - பெங்களூரு, டில்லி - மும்பை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களின் சேவையும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 15ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என ஏர் - இந்தியா தெரிவித்துள்ளது-.