லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
ADDED : ஜூன் 17, 2025 01:44 PM

சென்னை: ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 270 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 17) ஏர் இந்தியாவின் விமானம் (எண் AI 159) ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்தது.
ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, லண்டன் செல்லும் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு (6E 2706) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.