காற்று மாசு மிக மோசமான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேற்றம்
காற்று மாசு மிக மோசமான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேற்றம்
ADDED : நவ 02, 2024 06:22 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த காற்றின் தரம் நேற்று, மோசமான நிலைக்கு முன்னேறியது.
டில்லியில் காற்றின் தரக் குறியீடு நேற்று முன் தினம் அதிகாலை 362 ஆக பதிவாகி இருந்தது. இது மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது. இதுவே நேற்று காலை 290 ஆக குறைந்து மோசமான நிலைக்கு வந்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 88 சதவீதமாக இருந்தது.
அண்டை மாநிலங்கள்:
ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் காற்றிம் தரம் மோசமான நிலையிலேயே இருந்தது. ஹரியானாவில் நேற்று காலை 9:00 மணிக்கு குருகிராம் - 212, ஜிந்த் - 285, அம்பாலா - 224, குருக்ஷேத்ரா - 244 என காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது. இது மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுவே நேற்று முன் தினம் குருகிராம் - 344, ஜிந்த் - 340, அம்பாலா - 308, குருஷேத்ரா - 304 என மிகவும் மோசமான நிலையில் இருந்த்து.
அதேபோல, ஹரியானாவின் பஹதுர்கர் - 218, பிவானி - 224, சார்க்கி தாத்ரி - 229, பதேஹாபாத் - 224, ஹிசார் - 204, கர்னால் - 277, சிர்சா - 251, யமுனா நகர் - 243 என காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 9:00 மணிக்கு பதிவாகி இருந்தது.
சோனிபட்டில் காற்றின் தரக்குறியீடு 324 ஆக பதிவாகி மிகவும் மோசமான நிலையில் நீடிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. அமிர்தசரஸில் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு 314 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு நேற்று 346 ஆக உயர்ந்தது.
மண்டி கோபிந்த்கரில் நேற்று முன் தினம் 331 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு நேற்று 206 ஆக முன்னேறியது.
ஜலந்தர் - 239, கன்னா - 206, லூதியானா - 291, பாட்டியாலா - 231 ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு 303 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு 289 ஆக மேம்பாடு அடைந்திருந்தது.
பஞ்சாபில் பயிர்க் கழிவுகளை எரிப்பதை தடுக்க போலீஸ் மற்றும் சிறப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.