வாரணாசியில் 3-வது முறையாக மோடியை எதிர்க்கும் அஜய் ராய்
வாரணாசியில் 3-வது முறையாக மோடியை எதிர்க்கும் அஜய் ராய்
ADDED : மார் 24, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நேற்று வெளியான காங். நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் உ.பி. வாரணாசி தொகுதியில் மூன்றாம் முறையாக மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் அஜய்ராய்.
7 கட்டங்களாக நடைபெற உள்ள பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. இதில் தமிழகத்தில் 7 தொகுதிகள் உள்பட 46 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இதில் உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்., கட்சியின் அஜய் ராய் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேச மாநில காங்., தலைவரான அஜய் ராய். ஏற்கனவே 2014, 2019 ஆகிய தேர்தல்களில் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில் மீண்டும் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

