ADDED : ஜூலை 22, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொல்கட்டா: 'ஐ.என்.எஸ்., அஜய்' போர்க்கப்பல், மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் உரு வாக்கப்பட்டது.
இந்திய கடற் படைக்கு, இந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட எட்டாவது மற்றும் கடைசி போர்க்கப்பல் இதுவாகும்.
கடற்படையின் துணை அட்மிரல் கிரண் தேஷ்முக்கின் மனைவியும், தளவாடப் பொருட்களின் பிரிவு தலைவருமான பிரியா இக்கப்பலின் வெள்ளோட்டத்தை கொல் க ட்டாவில் நேற்று துவக்கி வைத்தார்.
மொத்தம், 77.6 மீட்டர் நீளமும், 10.5 மீட்டர் அகலமும் உடைய அஜய் போர்க்கப்பல், ஒலி அலைகளின் வாயிலாக, கடற் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிகளை அழிக்கக்கூடியது.

