UPDATED : ஆக 22, 2011 04:18 PM
ADDED : ஆக 22, 2011 03:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக சேவக் மற்றும் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதில் அஜின்க்யா ரகானே மற்றும் வரூண் ஆருண் சேர்க்கப்பட்டுள்ளனர். இஷாந்த் இடது கணுக்காலில் தசைபிடிப்பினால் அவதிப்படுகிறார். சேவக் காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு 2வார கால ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் இரண்டு பேரும் ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.