sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/டில்லி உஷ்ஷ்ஷ்...; அஜித் தோவல் மாற்றம்?

டில்லி உஷ்ஷ்ஷ்...; அஜித் தோவல் மாற்றம்?

டில்லி உஷ்ஷ்ஷ்...; அஜித் தோவல் மாற்றம்?


ADDED : மார் 17, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 02:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி தேர்தல் பிரசாரம் வேகமெடுக்கும். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர்கள் அனைவருமே மீண்டும் பா.ஜ., ஆட்சி தான் என்பதில் உறுதியாக உள்ளனர்.

மூன்றாம் முறையாக பிரதமர் ஆனதும், தன் அலுவலகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்யவுள்ளாராம் மோடி. முக்கிய பதவிகளில் இப்போது உள்ளவர்களை மாற்றப் போகிறாராம்.

பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலர் என, பல ஐ.ஏ.எஸ்.,- ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மிகவும் சீனியர்கள். இவர்களை அதிரடியாக மாற்றி, முற்றிலும் இளைஞர்களை நியமிக்கப் போகிறாராம்.

இன்னொரு விஷயமும் டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மோடியின் வலது கரமாக செயல்படுபவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

'புதிய ஆட்சியில் இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம்' எனவும் கூறப்படுகிறது. இதைத் தவிர, புதிய அமைச்சர்கள் பட்டியலும் தயாராகி விட்டது என்கின்றனர். இப்போது பதவியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காதாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us