தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முஸ்லிம் பிரமுகர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு

 முஸ்லிம் பிரமுகர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு

 முஸ்லிம் பிரமுகர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு


ADDED : ஏப் 25, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், டாக்டர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 14 முக்கிய பிரமுகர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

டில்லியில் புதிதாக திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், வர்த்தகரும், கல்வியாளருமான ஜாபர் சரேஷ்வாலா தலைமையிலான குழு, அஜித் தோவலுடன் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக பேச்சு நடத்தியது.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, 'இந்தியாவில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; பிரிவினைவாதம் கூடாது.

'நாட்டின் ஒற்றுமை தான் மிகவும் முக்கியம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, அஜித் தோவல் வலியுறுத்தினார். இந்த தகவலை குழு தலைவர் ஜாபர் சரேஷ்வாலா உறுதிப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us