sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 அஜித் பவார் விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியானது

/

 அஜித் பவார் விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியானது

 அஜித் பவார் விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியானது

 அஜித் பவார் விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியானது


ADDED : மார் 01, 2026 01:57 AM

Google News

ADDED : மார் 01, 2026 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜன., 28ல் விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்றார். அப்போது விமானம் விபத்தில் சிக்கியதில் அவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திவரும் நிலையில், நேற்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

அதன் விபரம்:

விமானம் தரையிறங்குவது தொடர்பாக தகவல் அளிக்கும் கோபுரத்தில் இருந்த அதிகாரியிடம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் போதுமான வெளிச்சம் உள்ளதா என விமானி கேட்டுள்ளார்.

அதற்கு 3 கி.மீ., அளவுக்கு வெளிச்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் தரையி றங்கும் அளவுக்கு காற்று மெதுவாக வீசுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதை ஏற்று 11வது ஓடுபாதையில் தரையிறங்கியபோது விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்த அதிகாரியின் கவன குறைபாடு மற்றும் போதுமான வெளிச்சம் இல்லாததே விபத்துக்கு காரணம்.

மேலும், விமானம் தரை யிறங்க 5 கி.மீ., துாரத்துக்கு வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

முழுமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இல்லாத விமான ஓடுபாதை கொண்டது பாராமதி விமானநிலையம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us