sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை

/

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை

7


ADDED : நவ 07, 2025 05:04 AM

Google News

7

ADDED : நவ 07, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

மேலும், இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கி இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி அரசு நடக்கிறது. துணை முதல்வராக தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் பொறுப்பு வகிக்கிறார்.

இந்தச் சூழலில், அவரது மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு புனேவில் உள்ள, அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் விதிகளை மீறி விற்கப் பட்டுள்ளது. சுமார், 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், வெறும் 300 கோடி ரூபாய்க்கு கைமாறி இருக்கிறது.

கட்டணம் தள்ளுபடி மேலும் இந்த நிலத்தை, வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் பார்த் பவார் எழுதி வாங்கி இருப்பதாகவும், துணை முதல்வரின் மகன் என்பதால் பத்திரப்பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பத்திரப் பதிவு விதிகளின்படி, அரசு நிலங்களை தனியாருக்கு விற்க முடியாது. இந்தச் சூழலில், அரசு நிலம் துணை முதல்வரின் மகனுக்கு விற்கப்பட்டிருப்பதால், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூடுதல் தலைமை செயலர் விகாஷ் கார்கே தலைமையில் உயர்மட்ட விசாரணை கமி ட்டியையும் அமைத்துள்ளார்.

இந்த விவகார ம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் புனே துணை பதிவாளர் ரவீந்திர தாரு, தாசில்தார் சூர்யகாந்த் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து பத்திரப் பதிவு துறை ஐ.ஜி., ரவீந்திர பின்வாடே கூறியதாவது:

புனேவின் முந்த்வா பகுதியில் அரசுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், 'அமாதியா என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு இந்நிறுவனத்தில் பார்த் பவாரும் பங்குதாரராக இருக்கிறார். 300 கோடி ரூபாய்க்கு நிலம் விற்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் பதிவு கட்டணம் முழுதாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விதியின்படி, அரசு நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. இந்த சூழலில், அதிகாரிகள் இதற்கு எப்படி சம்மதித்தனர் என தெரியவில்லை. அரசு நிலமாக இருக்கும்பட்சத்தில், பத்திரப்பதிவு செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்த் பவார் மட்டுமின்றி, திக்விஜய் பாட்டீல் என்பவரது பெயரிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நில பேரம் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால், அஜித் பவாரும், அவரது மகனும் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

'எனக்கு தொடர்பு இல்லை'

புனேவில், தன் மகன் பார்த் பவார் நிலம் வாங்கியதற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என, துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்த நில பேரத்தில் மறைமுகமாக நான் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இதில் நடந்துள்ள முறைகேடுகளை நிச்சயம் விசாரிக்க வேண்டும். அது தான் சரியாக இருக்கும். என் பெயரை கூறிக் கொண்டு வருபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என, அதிகாரிகளுக்கு நான் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன். தவறு செய்வது எனக்கும் நிச்சயம் பிடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.



ரூ.21 கோடி தள்ளுபடியா?

நில பேரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, காங்., தலைவர் விஜய் வாடேடிவார் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: நில விற்பனை தொடர்பான ஆவணங்கள், அரசின் அனைத்து துறைகளிலும் ராக்கெட் வேகத்தில் நகர்ந்து இருக்கின்றன. ஒரு சில மணி நேரங்களுக்குள், தொழில்துறை இயக்குநரகம் நிலத்தை விற்க ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. மேலும், 21 கோடி ரூபாய் முத்திரைத்தாள் கட்டணத்தையும் அரசு துறைகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us