கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி : இன்று வேட்புமனு
கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி : இன்று வேட்புமனு
UPDATED : ஏப் 25, 2024 02:05 AM
ADDED : ஏப் 24, 2024 07:22 PM

லக்னோ: உ.பி. மாநிலம் கன்னோஜ் லோக் சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் உ.பி. உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக மே. 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கன்னோஜ் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இன்று (ஏப். 25)வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றார். இவரை தொடர்ந்து மகன் அகிலேஷ்இவரது மனைவி டிம்பிள் ஆகியோர் எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளனர்.. இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக சுப்ரத் பதக் உள்ளார்.

