தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆளில்லாத வனப்பகுதியில் அல் கொய்தா டிரெய்னிங்..! 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

ஆளில்லாத வனப்பகுதியில் அல் கொய்தா டிரெய்னிங்..! 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

ஆளில்லாத வனப்பகுதியில் அல் கொய்தா டிரெய்னிங்..! 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்


ADDED : ஆக 27, 2024 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முகாம் அமைத்து ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிறப்புப்படை

ராஜஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பிவான்டி வனப்பகுதியில் நடமாடுவதாக டெல்லி போலீஸ் சிறப்புப் படைக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியது. இதையடுத்து, பிவான்டி வனப்பகுதியில் அவர்கள் அதிரடியாக களம் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அல்கொய்தா முகாம்

தீவிர முயற்சியின் பலனாக அங்கு அல் கொய்தா பயிற்சி முகாம் அமைத்து தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். பயிற்சியில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.

ஆயுதங்கள்

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், டம்மி ஏ.கே., 47 ரக துப்பாக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் யார், அவர்கள் எங்கு இருந்து வந்துள்ளனர், எத்தனை நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்று தீவிர விசாரணையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

பயிற்சி மையம்

எதற்காக ஆயுதப்பயிற்சி நடத்தப்பட்டது, அந்த குறிப்பிட்ட வனப்பகுதியை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பயிற்சி நடைபெற்ற வனப்பகுதி அருகில் இந்திய விமானப்படையின் பயிற்சி மையம் உள்ளதால் வேறு ஏதேனும் சதி திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சதி திட்டம் முறியடிப்பு

ஆயுத பயிற்சி, 6 பேர் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us