ADDED : ஆக 30, 2024 10:59 PM

'சமாஜ்வாதியினரின் தொப்பி நிறம் சிவப்பு, செயல்களோ கருப்பு' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நிறங்களில் நல்லது கெட்டது இல்லை. அது ஒருவரது பார்வையில் உள்ளது. குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க கருப்பு பொட்டு தான் வைக்கிறோம். தாலியிலும் கருப்பு மணி கோர்க்கிறோம்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
எங்களை பிரிக்க முடியாது!
மோடி மீதான என் அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. என் கருத்துக்கள் எப்போதும் அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. தேசிய அளவிலும், மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்போம்.
சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி ராம் விலாஸ்
கேலி செய்யும் ராகுல்!
பசியாற உணவு அருந்தியவர்களுக்கு தற்காப்பு கலை மற்றும் பிற விளையாட்டுகள் முக்கியம் தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால் நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்துடன் மக்கள் போராடும் போது, ராகுல் பாரத் டோஜோ யாத்திரை அறிவிப்பது, அவர்களை கேலி செய்யும் வகையில் உள்ளது.
மாயாவதி,தலைவர், பகுஜன் சமாஜ்