பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னிட்டு ஜன.,30ல் அனைத்து கட்சி கூட்டம்!
பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னிட்டு ஜன.,30ல் அனைத்து கட்சி கூட்டம்!
ADDED : ஜன 28, 2025 07:08 PM

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க, ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:ஜன.31ம் தேதி அன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காகவும், வரவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சுமூகமான விவாதத்தை உறுதி செய்வதற்காகவும் ஜன.30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

