தங்கவயலில் ஐக்கிய முன்னணி அனைத்து கட்சிகள் பங்கேற்பு
தங்கவயலில் ஐக்கிய முன்னணி அனைத்து கட்சிகள் பங்கேற்பு
ADDED : டிச 17, 2024 04:46 AM
தங்கவயல்: தங்கவயலில் அனைத்து கட்சிகள், அனைத்து பொதுநல அமைப்புகள் இணைந்து தங்கவயலை பாதுகாக்க, 'ஐக்கிய முன்னணி' என்ற அமைப்பை துவக்குவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
தங்கவயலில் குடிநீருக்கு நிரந்தர தீர்வு, குடியிருக்கும் வீடுகளை சொந்தம் ஆக்குதல், மருத்துவ, சுகாதார வசதிகள், வேலை வாய்ப்புகளில் உள்ளூர் காரர்களுக்கு முன்னுரிமை, தங்கச்சுரங்கம் மற்றும் பெமல் தொழிலாளர் பிரச்னைகள் ஆகியவை உள்ளடக்கி, பொது செயல் திட்டத்திற்காக அனைத்து கட்சிகள், பொது நல அமைப்புகள் இணைந்து, 'ஒருங்கிணைந்த ஐக்கிய முன்னணி' துவக்குவது குறித்து ஆலோசனை கூட்டம், ராபர்ட்சன்பேட்டையில் உள்ள கிங் ஜார்ஜ் அரங்கில் நடந்தது.
என்.ஜி.இ.எப்., முன்னாள் தலைவர் சங்கர், நகராட்சி முன்னாள் தலைவர்கள் முனிசாமி, கே.சி.முரளி, காங்கிரசின் நகராட்சி உறுப்பினர் ஜெயபால், பா.ஜ.,வின் நைனா ரவி, பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் வக்கீல் ஜோதிபாசு, ஸ்ரீ குமார், மா.கம்யூ., தங்கராஜ், தி.மு.க., சேகர், கண்ணையன், ம.ஜ.த., ராஜேந்திரன், சுடர்.
இந்திய குடியரசுக் கட்சி தர்மா, திலக்ராஜ், தமிழக வெற்றி கழகம் கதிர், வி.சி., ஜெயராஜ், அ.தி.மு.க., ராஜாசிங், நந்திதுருகம் பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் கணேசன், ஜெயசீலன், ஆர்.கே.பவுண்டேஷன் மோகன் கிருஷ்ணா, வேல்முருகன்.
எம்.ஜி.மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் தேவேந்திரன், அம்பேத்கர் பேரவை மதிவாணன், நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை ஜெயசீலன், பிரதாபன், தங்கவயல் தமிழ்ச்சங்கம் கமல் முனிசாமி, தீபம் சுப்ரமணியம், காந்தி காமராஜர் தேசிய மன்ற திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாடி அன்பழகன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.