ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியா : துஷ்யந்த் சவுதாலா மறுப்பு
ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியா : துஷ்யந்த் சவுதாலா மறுப்பு
ADDED : ஆக 23, 2024 03:00 AM

குர்கான்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வில்லை என ஜே.ஜே.பி. கட்சி தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கு அக். 01-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் பிரதான கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி. எனப்படும் ஜனநாயக் ஜனதா கட்சி 90 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என முன்னர் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி குறித்து ஜே.ஜே.பி., பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாயின. இதனை ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சியின் சந்தீப் பதக் மறுத்தார்.
நேற்று பதேஹாபாத் நகரில் ஜே.ஜே.பி. கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. செய்தியாளர்களிடம் துஷ்யந்த் சவுதாலா கூறுகையில் கட்சி வேட்பாளர் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினோம். தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் திட்டம் இல்லை என்றார்.