காங்கிரஸ் மீது கூட்டணி கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை: பா.ஜ., தாக்கு
காங்கிரஸ் மீது கூட்டணி கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை: பா.ஜ., தாக்கு
ADDED : பிப் 13, 2024 04:22 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மீதும் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து ஷேசாத் பூனவாலா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2 தொகுதிகள் கொடுக்க கூட காங்கிரசுக்கு தகுதியில்லை. எல்லா இடங்களிலும் நான் தனித்து போட்டியிடுகிறேன் என்றார். பஞ்சாபில் 13 தொகுதியிலும், சண்டிகரில் ஒரு தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மீதும் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்கலாம். காங்கிரசுக்கு நாடு முழுவதும் போட்டியிட 200 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகள் மட்டும் கொடுக்கப்பட வேண்டும். ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ஆரம்பித்ததில் இருந்து, யாரும் நியாயத்தைப் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.