ADDED : பிப் 17, 2024 04:51 AM

l மாணவர்கள் அல்லது தொழில் முனைவோர்களால் உருவாக்கப் படும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் வகையில் 'ராஜிவ் காந்தி தொழில் முனைவோர் நிகழ்ச்சி' நடத்தப்படும்
l தொழில்நுட்பத் துறையில் முன்னோடி மாநிலமாக கர்நாடகா உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த, பின்டெக், ஸ்பேஸ் டெக், ஆட்டோமோடிவ் டெக் துறையில் சிறந்த மையத்தை உருவாக்க, ஐந்தாண்டு காலத்தில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l கர்நாடகாவில் சர்வ தேச முதலீட்டை ஈர்க்க, நடப்பாண்டு, 'புதிய ஜி.சி.சி., என்ற உலகளாவிய திறன் மையங்கள் கொள்கை' அமல்படுத்தப்படும்
l கலபுரகி, ஷிவமொகா, ஹூப்பள்ளி, துமகூரில், திறமை மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்க, 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l மரபணு திருத்தம் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் படிப்புக்காக, அதிநவீன மரபணு திருத்தம் மற்றும் மரபணு சிகிச்சை மையம் அமைக்கப்படும். இதன் மூலம் சுகாதாரம், விவசாயம் மற்றும் இதர அறிவியல் தொடர்பான ஆய்வு மையமாக திகழும்
புதிய வேலைவாய்ப்பு
l 2024 - 29க்கான, ஏ.வி.ஜி.சி., - எக்ஸ்.ஆர்., என்ற அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் கொள்கை 3.0 அறிமுகப்பட உள்ளது. இதனால் 30,000 புதிய வேலை வாய்ப்பு உருவாக்கும். இதற்காக, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l இந்தாண்டு முதல் சாம்ராஜ் நகர், ஹாசன், மடிகேரி, சிர்சி, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், கதக், தார்வாட், ஷிவமொகா, ராய்ச்சூர், சிக்கபல்லாபூர், யாத்கிர், மைசூரில் புதிய அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் துவங்கும்
l உடுப்பி, ஹாவேரி, சித்தாபூர், ஆதி சுஞ்சனகிரி, துமகூரில் நடந்து வரும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் இந்தாண்டுக்குள் முடிவடையும்
தொழில்நுட்ப திருவிழா
l நட்சத்திர ஆய்வு மற்றும் வானியலில் மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்த, 833 பள்ளிகள், பி.யூ., கல்லுாரிகளுக்கு டெலஸ்கோப்கள் வழங்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l நடப்பாண்டு பெங்களூரில் இந்திய நானோ சர்வதேச மாநாடு நடத்தப்படும். மக்களிடையே அறிவியல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கு 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திருவிழா' நடத்தப்படும்
l மத்திய அரசுடன் இணைந்து பெங்களூரில் 'அறிவியல் நகரம்' அமைக்க, 233 கோடி ரூபாய் ஒதுக்கீடு.