ADDED : அக் 24, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகர்கஞ்ச்:மாசுக் கட்டுப்பாட்டுக்காக ஒரு மண்டலத்துக்கு 20 லட்ச ரூபாய் வீதம் 2.4 கோடி ரூபாயை எம்.சி.டி., எனும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.
துாசி மாசுபாட்டைத் தணிக்க இயந்திரங்கள் வாங்கவும், மனிதவளத்தை அதிகரிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். குறிப்பாக, மண்டல அளவில் தேவைப்படும் ஒட்டுமொத்த மனிதவளத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், ஸ்பிரிங்லர்களை இயக்கவும், ஓட்டுனர்களை பணியமர்த்தவும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

