தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ.,வுக்கு ஒதுக்கீடு:முதல்வர் ரங்கசாமி தகவல்

பா.ஜ.,வுக்கு ஒதுக்கீடு:முதல்வர் ரங்கசாமி தகவல்

பா.ஜ.,வுக்கு ஒதுக்கீடு:முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : பிப் 08, 2024 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:'கூட்டணி வேட்பாளர்வெற்றிக்கு உழைக்க வேண்டும்' என்ற முதல்வர்ரங்கசாமியின் பேச்சின் மூலம் புதுச்சேரி தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டது உறுதியானது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதி இக்கூட்டணியில் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

கடந்த வாரம் புதுச்சேரி வந்த பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., அமைச்சர்களுடன் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துபேசினார்.

அப்போது, புதுச்சேரி தொகுதியை பா.ஜ.,வுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, ரங்கசாமியும் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என்.ஆர்.காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த முடிவை, கட்சி ஆண்டு விழாவில் அறிவிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், என்.ஆர்.காங்., கட்சியின் ஆண்டு விழா நேற்றுநடந்தது.

இதில், கட்சி கொடி ஏற்றி தொண்டர்களிடம்முதல்வர் ரங்கசாமிபேசியதாவது:

லோக்சபா தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற செய்ய வேண்டியது மிக அவசியம் மற்றும் அது நம் கடமை.

கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு நாம் உழைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட குழுவும், 10 பேர் கொண்ட ஆலோசனை குழுவும் அமைக்கப்படும் என, தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சில் இருந்து, புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us