ADDED : ஜன 20, 2024 05:56 AM
துமகூரு: கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா அமைச்சர் ராஜண்ணா, சில நாட்களுக்கு முன் ஊடகத்தினர் சந்திப்பில், 'பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நானும் அயோத்திக்கு சென்றிருந்தேன். ஒரு டென்டில் இரண்டு பொம்மைகளை கொண்டு வந்து வைத்து, ராமன் என கூறினர். அவைகள் டூரிங் டாக்கீஸ் பொம்மைகள் போன்று தென்பட்டன' என கூறினார்.
இதனால் கொதித்தெழுந்த பா.ஜ.,வினர், அமைச்சர் ராஜண்ணாவை ராவணன் என, சாடினர்.துமகூரில் நேற்று அமைச்சர் ராஜண்ணா, கூறியதாவது:
பா.ஜ.,வினர் என்னை, ராவணன் என விமர்சித்துள்ளனர். இதனால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ராவணன் என, அழைக்கப்பட நான் தயார். அவரை போன்ற தெய்வ பக்தி கொண்டவர், வேறு யாரும் இல்லை. எனவே ராவணனாக நான் தயார்.
பொம்மையை கடவுள் என, அழைப்பதில் தவறென்ன. பொம்மையில் தெய்வாம்சம் இல்லையா. வயலில் சாணத்தை கடவுள் உருவமாக்கி பூஜிக்கிறோம். சிறிய கல்லையும் கடவுளாக வணங்குகிறோம். இது நம் நம்பிக்கை.
இதற்கு முன், அண்ணாதுரை, ராமாயணத்துக்கு பதிலாக, 'ராவணாயணா' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் சீதையை, ராவணன் பலாத்காரம் செய்வது இல்லை. இது அவரது நல்ல குணம் இல்லையா. ராவணன் சிவ பக்தன்.
இவருக்கு சிவ பெருமான் ஆத்ம லிங்கத்தை கொடுத்திருந்தார். நான் ஸ்ரீராமன், ராவணன் என, இருவருக்கு ஆதரவாகவும் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.