அமர்நாத் யாத்திரை தொடங்கியது ஸ்ரீநகரிலிருந்து முதல் குழு சென்றது
அமர்நாத் யாத்திரை தொடங்கியது ஸ்ரீநகரிலிருந்து முதல் குழு சென்றது
ADDED : ஜூலை 03, 2026 05:17 AM
ஜம்மு: இமயமலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் புனித யாத்திரையை, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பக்தர்களுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட், 28ல் நிறைவடைகிறது.
பாதுகாப்பு ஜம்மு - காஷ்மீரின் இமயமலை பகுதியில், 12,730 அடியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான யாத்திரையை, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, அங்குள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, பக்தர்கள் குழு திரண்டு, 'பம் பம் போலே, ஹர ஹர மஹாதேவ்' என, முழக்கமிட்டனர். 57 நாட்கள் நீடிக்கும் இந்த புனித யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ., நீளமுள்ள நுன்வான் - -பஹல்காம் பாரம்பரிய வழித்தடத்திலும், காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான குறுகிய 14 கி.மீ., நீளமுள்ள பல்தால் வழித்தடத்திலும் ஒரே நேரத்தில் தொடங்கியது.
இதன்படி, காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் ஆகிய இரு அடிவார முகாம்களுக்குச் செல்லும் பக்தர்களின் முதல் குழு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு இடையே, புறப்பட்டது.
கட்டுப்பாடு நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு 3.90 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்து உள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கண்காணிப்பு பணிகளையும் போலீசார் தீவிரப் படுத்தியுள்ளனர்.
