தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் துவக்கம்

 அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் துவக்கம்

 அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் துவக்கம்


ADDED : ஏப் 13, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு: அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை, ஜூலை 3 முதல் ஆக., 28 வரை நடக்கிறது. இதற்கான முன்பதிவு நாளை மறுநாள் துவங்குகிறது.

ஜம்மு - காஷ்மீரின் இமயமலை பகுதியில், அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில், யாத்திரைக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்பின், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை, ஜூலை 3ல் துவங்குகிறது. வரும், ஆக., 28 வரை, 57 நாட்கள் இந்த யாத்திரை நடக்கும். இதற்கான முன்பதிவு நாளை மறுநாள் முதல் துவங்குகிறது.

குறைந்தபட்சம், 13 வயது முதல், அதிகபட்சம் 70 வயதான பக்தர்கள் வரை யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர். அமர்நாத் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். அமர்நாத் கோவிலில், ஜூன் 19ல், ஜேஷ்ட பவுர்ணமி நாளில் முதல் பூஜை நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us