அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்? அறிவிக்க தயாராகி வருகிறது காங்.,
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்? அறிவிக்க தயாராகி வருகிறது காங்.,
ADDED : மே 02, 2024 08:48 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துள்ள காங்., மேலிடம் நாளை இரு தொகுதிகளிலும் மெகா பேரணி, நடத்திட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
காங்., கோட்டை என சொல்லப்பட்டு வரும் உ.பி.மாநிலம் அமேதி ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு காங். ,வேட்பாளர்களை அறிவிப்பதில் கட்சி மேலிடம் தாமதம் செய்து வருகிறது. பிரியாங்கா , ராகுல் போட்டியிடலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் காங்., மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, அமேதியில் நாளை காங்., மெகா ‛‛வாகன பேரணி'' நடத்த உள்ளது. அதே போன்று ரேபரலி தொகுதியில் ரோட் ஷோ நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இன்று இரவுக்குள் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்., வேட்பாளர்களை அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ரேபரேலி காங்., அலுவலகத்தில் பிரியங்காவின் மெகா சைஸ் போஸ்டர்கள். பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் தாய் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் பிரியங்கா களம் இறங்குவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

