துடைப்பத்தால் துடைத்து எறிவர் ஆம் ஆத்மிக்கு அமித்ஷா சாபம்!
துடைப்பத்தால் துடைத்து எறிவர் ஆம் ஆத்மிக்கு அமித்ஷா சாபம்!
ADDED : பிப் 01, 2025 10:12 PM

புதுடில்லி:“ஊழலில் திளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சட்டவிரோதமாக குடியேறியோருக்கு அடைக்கலம் அளித்தது,”என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
முஸ்தபாபாத் தொகுதியில் நேற்று நடந்த பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான அலைதான் வீசுகிறது. இது, அந்தக் கட்சியின் தலைவர்களுக்கே நன்றாகத் தெரியும்.
ஊழலில் திளைத்துள்ள ஆம் ஆத்மி, நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியோருக்கு அடைக்கலம் கொடுத்தது.
டில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை அதன் சின்னமான துடைப்பத்தாலேயே துடைத்து எறியப் போகின்றனர்.
டில்லியின் பேரழிவான ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான மாபியா, மோசடியில் ஈடுபட்ட நேர்மை தவறியவர்களை வேரறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தலைநகர் டில்லியின் வளர்ச்சிக்காக மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டும்.
தேர்தல் நாளில் கொஞ்சம் கூட சோம்பேறித்தனமாக் இருக்காதீர்கள். விரைந்து சென்று உங்கள் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், 2020ம் ஆண்டு டில்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீண்டும் வந்து விடுவர். டில்லியை கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் வேண்டுமா? அல்லது டில்லி மாநகரைக் காப்பாற்றியவர்கள் வேண்டுமா” என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.