sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

/

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

11


UPDATED : பிப் 02, 2026 03:59 PM

ADDED : பிப் 02, 2026 03:48 PM

Google News

11

UPDATED : பிப் 02, 2026 03:59 PM ADDED : பிப் 02, 2026 03:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : லோக்சபாவில் விவாத நேரத்தின் போது காங் எம்பி ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் லோக்சபாவில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன.

அதன் விபரம் பின்வருமாறு:

ராகுல் பேசுகையில், 'இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது பற்றி, முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயயசரிதை புத்தகத்தை வெளியிடுவதை மத்திய அரசு தடுத்துள்ளது' என தெரிவித்தார்.

ராகுல் பேசி கொண்டு இருந்த போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் குறுக்கீட்டு பேசினர்.

'நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் உள்ளவற்றை அவையில் வாசிக்கக் கூடாது' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆட்சேபனையை ஆதரித்து, ராகுல் தனது கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு ராகுல், 'ஆதாரபூர்வமற்ற எதையும் அவையில் நான் குறிப்பிடவில்லை' என தெரிவித்தார்.

ராகுலுக்கு ஆதரவு


பின்னர், 'ராகுல் பேச்சில் ஏதாவது தவறு இருந்தால் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கலாம். ஆனால் தடுக்கக்கூடாது' என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.

'சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பேசும்போது ஏன் எதிர்க்கிறீர்கள்' என ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.

பாஜவினரும் காங்கிரஸ் கட்சியினரும் போட்டி முழக்கமிட்டதால் லோக்சபாவில் சலசலப்பு நிலவியது.

ராகுலை பேசவிடாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக லோக்சபா மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us