நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் 'ரோடு ஷோ'வில் தொண்டர்கள் வரவேற்பு
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் 'ரோடு ஷோ'வில் தொண்டர்கள் வரவேற்பு
UPDATED : ஏப் 18, 2024 11:31 AM
ADDED : ஏப் 18, 2024 11:30 AM

ஆமதாபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.,19) வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். முன்னதாக இன்று தனது காந்திநகர் தொகுதியில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற அவருக்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபடுகிறது.
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 7ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடுகிறார்.


