ADDED : மார் 19, 2025 03:05 AM

புதுடில்லி: சொந்தமாக தொழில் செய்பவர்களை தவிர்த்து, நம் நாட்டில் தனி நபராக வருமான வரி செலுத்துவதில் திரைத் துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு.
அந்த வகையில், 2024 - 25ம் நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்துவதில் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த காலக்கட்டத்தில், இவர் 350 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதை அடுத்து, அதற்காக 120 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார்.
இதில், 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற 92 கோடி ரூபாய் சம்பளமாக அமிதாப் பெற்றுள்ளார்.
இது தவிர்த்து கல்கி 2898 ஏ.டி., படத்திற்காக 20 கோடி ரூபாயும், வேட்டையன் படத்திற்காக 7 கோடி ரூபாயும் அவர் வருமானமாக பெற்றது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், 92 கோடி ரூபாய் வரி செலுத்தி முதலிடத்தில் இருந்தார்.
இந்தாண்டு வெளியான பட்டியலில் அவரை அமிதாப் முந்தியுள்ளார்.