
பிரதமர் மோடி, தன் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்.,- அமைப்பை புகழ்ந்து பேசுவது, அந்த நாளையே அவமதிப்பதற்கு சமம். மஹாத்மா காந்தி படுகொலைக்குபின் தடைசெய்யப்பட்ட வலதுசாரி அமைப்பின் வரலாற்றை மறுக்கும் செயல். இது போன்ற அபத்தமான நடவடிக்கைகள், அந்த அமைப்பின் வரலாற்றை மூடி மறைக்க முடியாது.
பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
காங்.,கின் சவ யாத்திரை!
காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் பீஹாரில் 'இண்டி' கூட்டணி சார்பில் வாக்காளர்களின் உரிமை யாத்திரை துவங்க உள்ளது. இங்கு, காங்., தன் செல்வாக்கு இழந்து பல நாட்கள் ஆகின்றன. இந்த யாத்திரையும் தோல்வியை தழுவி எதிர்காலத்தில் அக்கட்சியின் சவ யாத்திரையாக மாறும். பீஹாரில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும்.
அஸ்வினி குமார் சவுபே மத்திய அமைச்சர், பா.ஜ.,
தர்மப்பாதையை பின்பற்றுக!
கடவுள் கிருஷ்ணர் காட்டிய தர்மப்பாதையை பின்பற்றி, தேச ந லனுக்காக மக்கள் பாடுபட வேண்டும் . ஜாதி, மொழியின் பெயரால் நாட்டை பலவீனமாக்கும் போக்கில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனாதன தர்மத்தின் கொடி உ லகை வழிநடத்தும் வரை , உலக சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வு நிலைத்திருக்கும்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,