
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள், 29 மாதங்களாக பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திடீரென அவசர அவசரமாக வரும் 13ம் தேதி பிரதமர் மணிப்பூர் செல்கிறார். அங்கு மூன்று மணிநேரம் மட்டுமே செலவிட உள்ளார். இது, மாநில மக்களை அவமதிக்கும் செயல்.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
எங்களுக்குள் போட்டியில்லை!
மஹாராஷ்டிராவை ஆளும் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அரசில் பெயர் வாங்குவது யார் என்பதில், எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. முதல்வருடன் ஒரு அணியாகவே செயல்படுகிறோம். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் என்பதே எங்களின் நோக்கம்.
ஏக்நாத் ஷிண்டே மஹா., துணை முதல்வர், சிவசேனா
வரி பயங்கரவாதம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பயங்கரவாதத்தால் உருவாகியுள்ள நிலைமையை சமாளிக்க, மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக வலுவான சீர்திருத்தங்களை துவங்குவது அவசியம். இந்த நடவடிக்கையை எடுக்க தவறி னால் ஏற்கன வே உள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பொருளாதார பிரச் னைகள் தீவிரமடையும் .
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்