ADDED : பிப் 03, 2024 04:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பந்திப்பூர் வனத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
யானை உடல் பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் ஒரு கட்டி இருந்தது. அது பழுத்திருக்கிறது. யானையின் ஆணுறுப்பில் காயம் இருந்தது. இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருந்தது. மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

