ADDED : ஜன 28, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தட்சிண கன்னடா: சுள்ளியாவில், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ஆண் யானை உயிரிழந்தது.
தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியாவின் மண்டேகோலு கிராமத்தில் நேற்று யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரி பிரவீன் குமார் ஷெட்டி ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு ஆண் யானைகள் இடையே வேறு இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த யானை, அங்கிருந்து வந்து இக்கிராமத்தில் இறந்துள்ளது.
யானை தாக்கிய காயங்கள் காணப்படுகின்றன. இறந்த யானைக்கு சுள்ளியா கால்நடை மருத்துவக் குழுவினர், இங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். வனத்துறை விதிகளின்படி, யானை அடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

