ADDED : ஏப் 08, 2025 12:56 AM

நம் நாடு சுதந்திரம் பெற்றபோது வக்ப் வாரியத்திடம் இருந்த நிலங்களின் அளவு 4,000 ஏக்கர் மட்டுமே. தற்போது அந்த எண்ணிக்கை 9.5 லட்சம் ஏக்கராக உள்ளது. இனி யாருடைய நிலத்துக்காவது சென்று வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது என பலகை வைக்க முடியாது. அதற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ராஜா சிங்
லோக்சபா எம்.பி., --- பா.ஜ.,
காங்கிரசை எதிர்பார்க்கின்றனர்!
நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ., ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை பா.ஜ., ஏமாற்றிவிட்டதாக அவர்கள் உணர்கின்றனர். தற்போது காங்கிரசை அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக மக்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது நம் கடமை.
பவன் கெரா
மூத்த தலைவர், காங்கிரஸ்
ஓட்டு வங்கிக்காக வழக்கு!
வக்ப் சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படப் போவது வக்ப் நிலங்களை அபகரித்து வைத்துள்ளவர்கள் தான். ஆனாலும் பல அமைப்புகள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை. ஓட்டு வங்கியை துாண்டிவிடுவதே நோக்கமாக உள்ளது.
செஷாத் பூனாவாலா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

