தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் அனந்த் அம்பானி!

170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் அனந்த் அம்பானி!

170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் அனந்த் அம்பானி!


UPDATED : ஏப் 07, 2025 09:16 AM

ADDED : ஏப் 06, 2025 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2025 09:16 AM ADDED : ஏப் 06, 2025 07:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துவாரகா: தமது 170 கி.மீ., பாத யாத்திரையை அனந்த் அம்பானி இன்று துவாரகாவில் நிறைவு செய்தார்.

உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும்,ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி. இவர் தமது 30வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து 170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரை மேற்கொண்டார்.

இந்த பயணம், ஜாம் நகரில் இருந்து துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 29ம் தேதி தனது பாதயாத்திரையை அனந்த் அம்பானி தொடங்கினார். தினமும் 12 கி.மீ., முதல் 15 கி.மீ., வரை நடந்தார். பெரும்பாலும் அவரின் பயணம் இரவு நேரங்களில் தான் இருந்தது.

அனந்த் அம்பானியின் பாத யாத்திரை பயணம், இந்து நாட்காட்டியின் படி அவரது பிறந்த நாளான இன்று நிறைவு பெற்றது. ராமநவமி நாளான இன்று (ஏப்.6) துவாரகாதீஷ் கோவிலுக்கு சென்று பயணத்தை பூர்த்தி செய்தார். அங்கு அவரது தாயார் நீடா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் அனந்த் அம்பானியை சந்தித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us