ADDED : ஆக 11, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : காங்கிரசில் வெளியுறவு பிரிவின் தலைவராக, 2018ல் நியமிக்கப்பட்டார், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா.
இந்நிலையில், அந்த பொறுப்பிலிருந்து நேற்று அவர் விலகினார். இது தொடர்பாக கட்சி தலைவர் கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
எனினும், கட்சி யின் காரிய கமிட் டி குழுவின் உறுப்பினராக ஆனந்த் சர்மா தொடர்கிறார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வர்த்தகம், ஜவுளி, வெளியுறவு உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவர், ஆனந்த் சர்மா.
கடந்த 2022ல், கட்சியில் முழு சீரமைப்பு செய்ய வேண்டும் என, 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். அதில் ஆனந்த் சர்மாவும் ஒருவர்.
சமீபத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பிய அ னைத்துக்கட்சி குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.