புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்: தனியாருக்கு வழங்க முடிவு
புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்: தனியாருக்கு வழங்க முடிவு
ADDED : செப் 18, 2024 11:21 PM

அமராவதி: ஆந்திராவில் டெண்டர் மூலம் தனியாருக்கு மதுபான கடைகள் உரிமம் வழங்க வகையில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில அரசு இன்று ( செப்.,18) வெளியிட்டது. வரும் அக்.01-ம் முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திராவில் முந்தைய ஓய்.எஸ்.ஆர்.,காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி , ஆட்சியில் புதிய கலால் சட்டத் திருத்தத் தின் படி ஆந்திரா முழுவதும் மதுக் கடைகளை அரசே நிர்வகித்து வந்தது.
இந்நிலையில் ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து புதிய மதுபான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது வரும் அக்.01-ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாதுபான கொள்கையின்படி டெண்டர் மூலம் மாநிலம் முழுதும் உள்ள 3,746 மதுபான கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.