ஆந்திர வெள்ளம்: ரூ.25 கோடி நிவாரண நிதி அளித்தது அதானி குழுமம்!
ஆந்திர வெள்ளம்: ரூ.25 கோடி நிவாரண நிதி அளித்தது அதானி குழுமம்!
ADDED : செப் 19, 2024 04:09 PM

புதுடில்லி: ஆந்திராவில், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, உதவுவதற்காக அதானி குழுமம், இன்று ரூ 25 கோடி நிதி அளித்துள்ளது.
ஆந்திராவில் இடைவிடாத மழையால், குளங்கள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவதால் மாநிலங்களின் பல பகுதிகள், மாத தொடக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் ஆந்திராவுக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து,இன்று அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், ரூ.25 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
கவுதம் அதானி, வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமம், ஆந்திர மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அதானி அறக்கட்டளை மூலம் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது,இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கரண் அதானி கூறுகையில், ''ஆந்திர முதல்வர் தலைமையிலான நிவாரணப் பணிகளில் பங்களிப்பது எங்கள் பாக்கியம்,'' என்றார்