UPDATED : ஜூலை 06, 2024 07:23 PM
ADDED : ஜூலை 06, 2024 07:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா காங்.முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, மாநில நல்லுறவு , இரு மாநிலங்களின் நலன் சார்ந்த விஷயங்கள், குறிப்பாக நதிநீர்பங்கீடு, மற்றும் பிரிவினைக்கு முன்பாக மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சனைகள் உள்ளிட்ட நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எனவும் கூறப்படுகிறது.