தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கைதான தந்திரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

 கைதான தந்திரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

 கைதான தந்திரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை


ADDED : பிப் 03, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் தங்கம் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தந்திரி ராஜீவரருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப் படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் உள்ள தொடர்பின் அடிப்படையில் தந்திரி ராஜீவரரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜன., 10ல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு, இதயநோய் நிபுணர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us