தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ மோடி மீது கோபம்?

மோடி மீது கோபம்?

மோடி மீது கோபம்?


ADDED : ஆக 31, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கும் இடையே உறவு சரியில்லை. அதனால்தான், 75 வயதிற்கு மேற்பட்ட தலைவர்கள், அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என, பக்வத் சொன்னார்' என்று, டில்லி அரசியல் வட்டாரங்களில் இந்த உறவு குறித்து பேசப்பட்டது.

'இருவருக்கும் இடையே உள்ள விரிசல்தான், பா.ஜ.,வின் தேசிய தலைவரை நியமிப்பதிலும் பிரச்னையை உண்டாக்கி உள்ளது. அதனால்தான், இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை' என, சொல்லப்பட்டது.

சமீபத்தில் மீடியாவை சந்தித்த பகவத், 'எனக்கும், மோடிக்கும் சண்டை எதுவும் கிடையாது; ஆனால், கருத்து வேறுபாடுகள் உண்டு. இருவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்' என, கூறினார். மோடி என சொல்லாமல், இரண்டு அமைப்புகள் என, பேசி உள்ளார் பகவத்.

'அதே போல, 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நான் சொல்லவில்லை; ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சீனியர் ஒருவர் கிண்டலாக பேசியதைத் தான் சொன்னேன்' என்றும் கூறினார்.

'இதிலிருந்து இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., தான் பா.ஜ., தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்றால், இத்தனை தாமதம் ஏற்பட்டிருக்காது' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

'மோடி பகவத் இடையே உள்ள வேறுபாடு தொடர்வது அரசுக்கு நல்லதல்ல என, சில பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சீனியர்கள் பகவத்திடம் கூறினராம். அதனால்தான் மீடியாவை சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தன் நிலையை விளக்கியுள்ளார்' என்கின்றனர், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us