sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்து முடக்கம்

/

அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்து முடக்கம்

அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்து முடக்கம்

அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்து முடக்கம்


ADDED : மார் 12, 2026 10:49 PM

Google News

ADDED : மார் 12, 2026 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, தமிழகம் உட்பட, 13 மாநிலங்களில் உள்ள, தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான, 581.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

தொழில் அதிபர் அனில் அம்பானி, பல வங்கிகளில், கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலான, வங்கி கடன் மோசடி தொடர்பாக, அனில் அம்பானிக்கு சொந்தமான, 15,729 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட, 13 மாநிலங்களில், அனில் அம்பானிக்கு சொந்தமான, 581.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று முடக்கினர்.இதன்மூலம் முடக்கப்பட்ட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 16 ஆயிரத்து 310 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us