ADDED : ஆக 18, 2011 05:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : வலுவான லோக்பால் மசோதா வேண்டி, திகார் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை ஆதரித்து திகார் சிறையில் குழுமியிருந்த அவரது ஆதரவாளர்களிடம், பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பணம் மற்றும் தங்களது உடைமைகளை பறிகொடுத்த அன்னா ஆதரவாளர்கள் தொடர்ந்து போலீசிடம் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, திகார் சிறை முன் குழுமியிருக்கும் ஆதரவாளர்கள், தங்கள் பணம் மற்றும் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டார்கள்.