sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்

/

சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்

சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்

சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்


ADDED : ஜூலை 29, 2025 03:58 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 03:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. விசேஷ ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றன. 36 கோவில்களில் இருந்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைமை அதிகாரி பி.ஏ.முரளி ஶ்ரீ மடத்தின் அனேக சேவைகளையும், நடந்த நிகழ்ச்சிகளையும் குறிப்பிடும் பொழுது பேசியதாவது:ஶ்ரீ சன்னிதானத்தின் சமீபத்திய திருச்செந்தூர் விஜயம் 100 வருடங்களுக்கு முன் 1924ம் ஆண்டு சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ சந்திர சேகர பார்தீ மகாசுவாமிகள் சென்று சரியாக 100 வருடம் கழித்து நடந்தது தெய்வ செயல். அதனை கண்டு களித்த திருசுதந்திரர்கள் எங்கள் முப்பாட்டனார்கள் ஆதி சங்கரர் பூஜை செய்ததை பார்த்திருக்கலாம். அந்த வம்சத்தில் வந்த நாங்களும் இன்று ஆதி சங்கரரை பார்த்தோம் என மகிழ்ந்து கூறினர்.

அதேபோல் ராமேஸ்வரம் விஜயமும் அனைத்து பீடாதிபதிகளும் எவ்வாறு விஜயம் செய்தனரோ அதே போல நிகழ்ந்தது.

ஶ்ரீ சுவாமிகளின் பிரயாக் ராஜ், காசி, அயோத்யா யாத்திரைகளும் நன்கு நடநதன.

சாகித்ய சாரதா எனும் பத்திரிகை, தர்ம சாஸ்த்ரா சபா ஆகியவை துவங்கப் பட்டுள்ளன.

காசி, ராமேஸ்வரம், பண்டர்பூர், அயோத்யா ஆகிய இடங்களில் நித்ய அன்னதானம் நடைபெறுகிறது. சிருங்கேரி மருத்துவமனையில் நவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ நிறுவப்பட உள்ளன. நடமாடும் மருத்துவ மனையானது கிராமப்புறங்களில் சேவை நடத்தி வருகிறது.

புதிய CBSC பள்ளி 2 வருடங்களில் சிருங்கேரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சங்கீத சாரதா எனும் ஆன்லைன் தொகுப்பில் அனைத்து பாடல்களும் இடம்பெறும்.

ஶ்ரீ மடத்து அனைத்து புத்தகங்களும் ஆன்லைனில் கிடைக்கும். சிறார்களின் வழிநடத்தலுக்காக பால பாரதி எனும் அமைப்பு செயல் படுகிறது என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அருளுரை வழங்கிய சுவாமிகள் கூறியதாவது.

சிருங்கேரி பீடத்தின் அனைத்து ஆசாரியர்களும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தான் இருந்திருக்கின்றனர் மற்றும் aனைத்து நல்ல காரியங்களையும் செய்திருக்கின்றனர். அதே வழியில்தான் எங்களது குருநாதர் ஶ்ரீ ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் 50 வருடங்களாக அனுக்ரஹம் செய்து வருகிறார்.

ஶ்ரீ மடம் செய்யும் நற்காரியங்களை எல்லோருக்கும் தெரியவைப்பதின் காரணம் ஒவ்வொருவருக்கும் அவைகளில் சிறிதாவது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகதான்.

சனாதன தர்மரத்தின் இரண்டு அடிப்படைபகவத் ஆராதனை, பரோபகாரம். மனிதனுக்கு தன் ஒவ்வொரு காரியத்திற்கும் இறைவனின் அனுக்ரஹம் வேண்டும், தம்முடைய முயற்சியும் வேண்டும்.

உலகத்தின் ஆதாரம் தர்மம். அனைவருக்கும் தர்மத்தை காக்கும் கடமை உள்ளது. தர்மத்தினை காப்பது என்பது அதனை செயலில் கொண்டு வந்து அதன்படி வாழ்வது என்பது தான்.

நாம் நம் சந்ததியினருக்கு கொடுக்கும் சொத்து நமது இந்த உயர்ந்த கலாசாரம் மட்டுமே. இவ்வாறு சுவாமி கூறினார்.முடிவில் மஹா சன்னிதானம் அருளுரை தொகுப்பினை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிட்டார்.






      Dinamalar
      Follow us