
பீஹாரில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தே.ஜ., கூட்டணி தயார். தொகுதி பங்கீடு பேச்சுகள் சுமுகமாக நடந்து வருகின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியானதும், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும். சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும்.
திலிப் ஜெய்ஸ்வால் பீஹார் பா.ஜ., தலைவர்
ராகுல் நிலை தான் தேஜஸ்விக்கும்!
பீஹார் சட்டசபை தேர்தலில், ரகோபூர் தொகுதியில் நான் போட்டியிட்டால், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டியிருக்கும். 2019 லோக்சபா தேர்தலில் காங்., தலைவர் ராகுல் எதிர்கொண்ட அதே சூழ்நிலையை அவரும் சந்திப்பார். தொகுதி குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.
பிரசாந்த் கிஷோர் தலைவர், ஜன் சுராஜ்
100 இடங்களில் போட்டி!
பீஹார் சட்டசபை தேர்தலில், 100 தொகுதிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., போட்டியிடும். அப்போது தான், பா.ஜ., கூட்டணியும், காங்., கூட்டணியும் எங்களது இருப்பை புரிந்து கொள்வர். கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்விக்கு கடிதம் எழுதியது உண்மை தான். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
அக்தருல் இமான் ஏ.ஐ.எம்.ஐ.எம்., - பீஹார் தலைவர்