sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2,000 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

/

2,000 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

2,000 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

2,000 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு


ADDED : அக் 05, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மைசூரு தசராவை ஒட்டி, பயணியர் வசதிக்காக, வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 2,000 பஸ்கள் இயக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

 மைசூரு தசாவை ஒட்டி, பயணியர் வசதிக்காக வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பெங்களூரு, கர்நாடகாவில் இருந்து கூடுதலாக, 2,000 பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ் தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, பெலகாவி, விஜயபுரா, மங்களூரு, தாவணகெரே, கோகர்ணா, கொல்லுார், ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, கார்வார், பல்லாரி, ஹொஸ்பேட், கலபுரகி, ராய்ச்சூர் மற்றும் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, ஹைதராபாத், பஞ்சிம், புனே, எர்ணாகுளளம், பாலக்காடு உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் இயக்கப்படும்.

 மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து 260 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மைசூரில் இருந்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆன்மிகம், சுற்றுலா தலங்களான சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் கார்டன், ஸ்ரீரங்கபட்டணா, நஞ்சன்கூடு, மடிகேரி, மாண்டியா, மலவள்ளி, எச்.டி.கோட்டே, சாம்ராஜ் நகர், ஹுன்சூர், கே.ஆர்.,நகர், குண்டுலுபேட் உட்பட பல இடங்களுக்கு 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மைசூருக்கு நேரடியாக ஏசி வசதியுடன் கூடிய 'பிளை பஸ்' இயக்கப்படுகிறது.

 டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், www.karntaka.gov.in என்ற இணையத்தில் செய்யலாம்.

 நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் செல்ல மட்டும் முன்பதிவு செய்தால், அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடியும்; சென்று வர முன்பதிவு செய்தால், 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரு நாள் சுற்றுலா

 கிரிதர்ஷினி: பண்டிப்பூர், கோபாலசுவாமி மலை, பி.ஆர்., மலை, நஞ்சன்கூடு, சாமுண்டி மலைக்கு செல்ல, பெரியவர்களுக்கு 400 ரூபாய், சிறியவர்களுக்கு 250 ரூபாய். ஜலதர்ஷினி: பைலகுப்பேயில் உள்ள தங்க கோவில், துபாரே வனப்பகுதி, நிசர்கதாமா, ராஜாசீட், ஹாரங்கி அணை, கே.ஆர்.எஸ்., அணை செல்ல, பெரியவர்களுக்கு 450 ரூபாய், சிறியவர்களுக்கு 300 ரூபாய். தேவதர்ஷினி: நஞ்சன்கூடு, முதுகுத்தோர், தலகாடு, சோமநாதபுரா, ஸ்ரீரங்கபட்டணாவுக்கு செல்ல, பெரியவர்களுக்கு 300 ரூபாய், சிறியவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா பாக்கேஜ் வரும் 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.








      Dinamalar
      Follow us