மாசு கட்டுப்படுத்தும் சோதனைகள் 2ம் கட்டத்தில் உள்ளதாக அறிவிப்பு
மாசு கட்டுப்படுத்தும் சோதனைகள் 2ம் கட்டத்தில் உள்ளதாக அறிவிப்பு
ADDED : ஏப் 04, 2026 01:42 AM

புதுடில்லி டில்லியில் நிலவும் மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கையில், 33 அம்சங்கள், இரண்டாம் கட்ட சோதனையை தாண்டியுள்ளன என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறினர்.
டில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வல்லுனர்கள் மேற்பார்வையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பலர் கொடுத்துள்ள நடவடிக்கைகள், சோதனை அடிப்படையில் உள்ளன.
இந்த வல்லுனர் குழு, இதுவரை, மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, 33 அம்சங்களை அறிவித்துள்ளன.
அவற்றில், சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும், கம்பத்தில் பொருத்தப்படும் துாசுக்களை கட்டுப்படுத்தும் அமைப்பு; பில்டர்லெஸ் ஸ்மோக் அண்ட் டஸ்ட் கேப்சரிங் டிவைஸ், எலக்ட்ரோ ஸ்டாடிக் மிஸ்ட் ஸ்பிரேயர்கள், ஸ்மார்ட் சப்ரஷன் அண்ட் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும்.
இப்போது சோதனை மட்டத்தில் இருக்கும் இந்த நடவடிக்கைகள், இரண்டாம் கட்ட சோதனையை எட்டியுள்ளன என, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த நடவடிக்கைகள், வல்லுனர் குழுவால் சோதனை ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வெற்றி பெறும் நடவடிக்கைக்கு, டில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 லட்சம் ரூபாய் வெகுமதியாக அறிவித்துள்ளது.
