ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
UPDATED : டிச 04, 2024 04:12 PM
ADDED : டிச 04, 2024 04:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, ரயில்வே துறை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களில் பயணிக்க டிக்கெட் பெறுபவர்களுக்கு ரயில்வே துறை மூலம் ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு டிக்கெட்டின் விலை ரூ.100 என்றால், அதில் ரூ.54 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ.46 தள்ளுபடி செய்யப்படுகிறது.
பூஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. சிறப்பான சேவையினால், பயணிகள் ரொம்ப திருப்தியடைந்துள்ளனர், எனக் கூறினார்.